பெற்றோர்களே உஷார் - நச்சுப்பொருள் கலந்திருப்பதால் அல்மாண்ட் கிட் இருமல் சிரப் வாங்க வேண்டாம் - தமிழக அரசு அதிரடித் தடை
அட்மின் மீடியா
0
பெற்றோர்களே உஷார் - நச்சுப்பொருள் கலந்திருப்பதால் அல்மாண்ட் கிட் இருமல் சிரப் வாங்க வேண்டாம் - தமிழக அரசு அதிரடித் தடை
பீகார் மாநிலம், ஹாஜிப்பூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் (Tridus Remedies) நிறுவனத்தின் தயாரிப்பான ‘அல்மான்ட் கிட் சிரப்’ (Almond Kid Syrup) மருந்தில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சுப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை நடத்திய சோதனையில், இந்தச் சிறுவர்களுக்கான சிரப்பில் ‘எத்திலீன் கிளைகால்’ (Ethylene Glycol) என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த மருந்தை உடனடியாகத் தடை செய்யுமாறு அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறைகளுக்கும் மத்திய அரசு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.
குழந்தைகளின் சளி மற்றும் ஒவ்வாமையைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் 'அல்மான்ட் கிட்' (Almond Kit) என்ற மருந்தில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இந்த மருந்தை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு முழுமையாகத் தடை விதித்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த 'டிரைடஸ் ரெடிஸ்' நிறுவனம் தயாரித்த இந்த மருந்தில், டைஎத்திலீன் கிளைகால்' (Diethylene Glycol) என்ற நச்சு ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நச்சு ரசாயனம் கலந்த மருந்தை உட்கொண்டால், குழந்தைகளுக்குக் கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உயிரிழப்புக்கும் வழிவகுக்கும் என்பதால் மருந்து கட்டுப்பாட்டுத் துறை இந்தத் தடையை விதித்துள்ளது.மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் விநியோகிப்பாளர்கள் இந்த மருந்தை உடனடியாக விற்பனையிலிருந்து நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த மருந்தை விற்பனை செய்திருந்தாலோ அல்லது யாராவது பயன்படுத்தியிருந்தாலோ அது குறித்த தகவலை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். மருந்துகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 94458 65400 என்ற வாட்ஸ்-அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
