Breaking News

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்…10 வீரர்கள் வீரமரணம்!

அட்மின் மீடியா
0

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்… 10 வீரர்கள் வீரமரணம்!

ஜம்மு - காஷ்மீர் டோடா பகுதியில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 200 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது.இதில், ராணுவ வீரர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்

உயிரிழந்த 10 ராணுவ வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.மேலும், உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த ராணுவ வீரர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback