இந்தோனேசியாவில் மலை பகுதியில் பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம் 11 பேர் பலி? வைரல் வீடியோ ATR 42-500
இந்தோனேசியாவில் மலை பகுதியில் பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம் 11 பேர் பலி?
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரிலிருந்து சுலவாசி தீவில் உள்ள மக்காசர் நகருக்கு நேற்று புறப்பட்ட ATR 42-500 ரக விமானம், தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இந்த விமானம் 'இந்தோனேசியா ஏர் டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதில் 8 ஊழியர்கள் மற்றும் இந்தோனேசிய கடல்சார் மற்றும் மீன்வள அமைச்சகத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் இருந்தனர்.
நேற்று மதியம் சுமார் 1:17 மணியளவில் தெற்கு சுலவாசி மாகாணத்தின் 'மாரோஸ்' (Maros) மலைப்பகுதிக்கு மேலே பறந்தபோது ரேடார் திரையிலிருந்து மறைந்தது.
அந்தப் பகுதியில் உள்ள மலை உச்சியில் விமானத்தின் சிதைவுகள் மற்றும் தீப்பிழம்புகளை மலையேற்ற வீரர்கள் பார்த்ததாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை, ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வான்வழித் தேடுதலும் நடைபெறுகிறது. இருப்பினும், அப்பகுதியில் நிலவும் கடும் மூடுபனி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தைச் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/2012731297592905911
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
