Breaking News

புதுச்சேரி கூட்டத்தில் விஜய் பேசியது என்ன முழு விவரம் vijay puducherry

அட்மின் மீடியா
0

புதுச்சேரி கூட்டத்தில் விஜய் பேசியது என்ன முழு விவரம் vijay puducherry

இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 

புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலில் உரையாற்றினார் அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்பல வருடங்கள் கழித்து புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கிறார் நம் தலைவர் தளபதி.. உங்கள பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. புதுவையிலும் கண்டிப்பாக தவெக ஆட்சி அமையும்.

புதுச்சேரியில் 2026-ல் நிச்சயம் தவெக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார். தமிழகத்தில் எல்லாவற்றுக்கும் சிக்கல். காற்றை அடைத்து வைக்க முடியுமா? விஜய்யை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தவெக தொண்டர்கள் அடுத்த 3 மாதம் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.



பொதுக்கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர், 

என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு வணக்கம். இந்த ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. நாம் ஒன்றுதான். எல்லோரும் சொந்தம்தான்,

தமிழ்நாடு மாதிரி புதுச்சேரி மக்களும் ஒரு 30 வருஷம் என்ன தாங்கி புடிச்சிட்டு இருகாங்க. விஜய் தமிழகத்துக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான் என நினைக்காதீர்கள். புதுவைக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பான். அது எனது கடுமை. தமிழகத்தில் உள்ள திமுக அரசு மாதிரி புதுவை அரசு கிடையாது. வேறு கட்சி நடத்தும் அரசியல் நிகழ்வு என்றாலும் பாதுகாப்பு அளிக்கிறார்கள். புதுவை அரசுக்கும், புதுவை முதல்வர் சாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள்  வரும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள். அதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்,"

கூட்டணியில் இருந்தபோதும் புதுச்சேரி அரசை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும், மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை 

மூடப்பட்ட ஆலைகளைத் திறக்கவில்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை, காரைக்கால், மாஹி, ஏனம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை என்று குறிப்பிட்டார். புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் இரயில் திட்டம் வேண்டும் .திமுகவை நம்பாதீங்க. நம்பவைத்து ஏமாற்றுவார்கள்,"

மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி இடம்பெறாததால் போதிய நிதி கிடைக்கவில்லை, கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது என்றும் கூறினார்.மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது, தொழில் வளர்ச்சியும் வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான் என்றும், மற்ற மாநிலங்களைப் போல் இங்கும் ரேஷன் கடைகளைத் தொடங்கி மக்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும். நம்பிக்கையாக இருங்கள். வெற்றி நிச்சயம்," என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback