Breaking News

today headlines news in tamil

அட்மின் மீடியா
0

 today headlines news in tamil


எஸ்.ஐ.ஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை (டிச.11) கடைசி நாள் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவிப்பு! தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை இன்று தொடங்குகிறது திமுக!.சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்க நடவடிக்கை.

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு. பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முடிவு எடுக்கப்படுமா? என எதிர்பார்ப்பு. சென்னை வானகரத்தில் இன்று காலை 10 மணிக்கு பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது

கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே தனியார் Resort-ல் வெளிநாட்டு உயர் ரக போதைப் பொருட்களை கொண்டு, போதை விருந்து நடத்திய ஒரு பெண் உட்பட 7 பேரை கைது செய்து, 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை.

நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறு சீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டத்தில் தற்போது 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு புதிதாக 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளன. இதன்படி மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. 176 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 74 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா. 1-0 என இந்தியா முன்னிலை.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்புமைசூரில் இருந்து வரும் 23, 27 தேதிகளில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வரும் சிறப்பு ரயில், 24, 28 தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூர் சென்றடையும்இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது

OPS, டிடிவியை சந்தித்துப் பேசிய நிலையில் அண்ணாமலை டெல்லி பயணம். அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சி, கூட்டணி குறித்து அமித் ஷாவுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

இண்டிகோ நிறுவனத்தின் 10% விமான சேவைகள் ரத்து. விமான சேவைகளை கையாள முடியாமல் திணறுவதால் விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை.

தெருநாய்ளுக்கு உணவளிக்க பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை தடை - தெருநாய்கள் பள்ளி வளாகத்தில் நுழையாமல் பார்த்துக்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

நிபந்தனைகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் இல்லை என கூறி, ஈரோட்டில் விஜய் பொதுக்கூட்ட தேதியை டிச.16ம் தேதியிலிருந்து 18ம் தேதிக்கு மாற்ற அனுமதி கோரிய த.வெ.க.வினர்

தமிழ்நாடு அரசு, ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இடையே ரூ.4,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து.

2026-தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அமமுக வேட்பாளர்கள் இன்று(டிச.10) முதல் டிச.18ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்.விருப்ப மனுவை பூர்த்து செய்து, ஜன. 3ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென அமமுக அறிவுறுத்தல் 

கூட்டணி அரசில் இருந்தாலும் புதுச்சேரியை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என விஜய் குற்றச்சாட்டு - புதுச்சேரியின் மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றவும் வலியுறுத்தல்

டிசம்பர் 16-ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் புதிதாக சேர்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் விளக்கம்

தமிழ்நாட்டில் விரைவில் அமைய உள்ள மெகா கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் - மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி; வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என கணிப்பு

புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிபறக்கும்...மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் உறுதி

தவெக பொதுக்கூட்டத்திற்கு பாரபட்சமின்றி பாதுகாப்பு வழங்கிய புதுச்சேரி அரசு, முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்த விஜய்...; புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக அரசு கற்க வேண்டும் எனவும் பேச்சு

என்ஆர் காங்கிரஸை கூட்டணிக்குள் இழுக்கும் வகையில் விஜயின் பேச்சு இருந்தது... புதுச்சேரி உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நமச்சிவாயம் கருத்து

சட்டமன்றத் தேர்தலுக்காக 234 தொகுதிகளிலும் விருப்பமனு பெறுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு; வரும் 15 ஆம் தேதி வரை விருப்பமனு கொடுக்கலாம் என செல்வப்பெருந்தகை தகவல்

கவுன்சிலர்கூட ஆகாதவர் நேரடியாக முதல்வராக விரும்புகிறார்; மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்க செய்வதுதான் தவெகவின் லட்சியம்; விஜய் மீதான விமர்சனத்திற்கு கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பதிலடி.

கோவை காந்திபுரம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்காவை நாளை(டிச.11) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிப்பு .செம்மொழி பூங்கா காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை திறந்திருக்கும் என அறிவிப்பு .பூங்காவைக்காண 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ₹5, பெரியவர்களுக்கு ₹15 நுழைவுக் கட்டணம் நிர்ணயம் மேலும் செம்மொழி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ள மாதந்திரக்கட்டணம் ₹100 அதேபோல் செம்மொழி பூங்காவில் குறும்படம் எடுக்க நாளொன்றுக்கு ₹2,000 கட்டணமாகவும் நிர்ணயம்,செம்மொழி பூங்காவில் திரைப்பட சூட்டிங்கிற்கு நாளொன்றுக்கு ₹25,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் |வைத்தியலிங்கம் இருந்து வருகிறார்; இந்த நிலையில், தவெகவில் சில நாட்களில் வைத்திலிங்கம் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback