today headlines news in tamil இன்றைய தலைப்பு செய்திகள் 09.12.2025
today headlines news in tamil இன்றைய தலைப்பு செய்திகள் 09.12.2025
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து 73 நாட்களுக்கு பிறகு இன்று புதுச்சேரியில் தனது பரப்புரை வாகனம் மீது நின்று பிரசாரம் செய்கிறார் தவெக தலைவர் விஜய்! 'QR Code' உடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்கும் 5,000 பேருக்கு அனுமதி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை.,மரங்கள், சுவர்கள், கொடிக் கம்பங்கள் மீது ஏறக்கூடாது என தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.
இந்தியாவில் விரைவில் அமலுக்கு வரும் புதிய UIDAI விதிப்படி, ஹோட்டல்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆதார் அட்டையின் நகல்களை சேகரிப்பது தடை செய்யப்பட்டு, QR அடிப்படையிலான டிஜிட்டல் சரிபார்ப்பு நடைமுறைக்கு வருகிறது.தனிநபர் விவரங்களை பாதுகாக்க, இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக UIDAI தலைமை செயலாளர் புவனேஷ் குமார் அறிவிப்பு
புதுச்சேரியில் விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த தவெக பிரமுகர் பிடிபட்டார்!மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தபோது அந்நபரிடம் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிப்பு!
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, மக்களவையில் இன்று 10 மணி நேரம் விவாதம் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பு!
நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் லஞ்சம் வசூலித்ததில் போலீசுக்கும் பங்கு எனும் முடிவுக்கு வர நேரிடும். தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை எழுதியுள்ள கடிதத்தில் எச்சரிக்கை . நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையின் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களுக்கு ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை கொடுத்துள்ளனர். இது "கட்சி நிதியாக" வசூலிக்கப்பட்டுள்ளது.சமுதாயக் கழிப்பறைகள், துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்தம் (Outsourcing), நபார்டு (NABARD) திட்டங்கள், துப்புரவுப் பணியாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள் மற்றும் நீர்நிலைப் பணிகள் என கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.₹1,020 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான பல நேரடி ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது
நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இந்துஜா மற்றும் அவரது கணவரின் பெயர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்டு இறந்தவர்களின் பட்டியலில் உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் குற்றச்சாட்டு.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி தனது முழு கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியை எட்டியது!ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறப்பு 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரிப்பு.
மக்களவையில் இன்று நடைபெற உள்ள இந்த விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இறுதியாக சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிக்கிறார்.
CBI, ED, தேர்தல் ஆணையம் என அனைத்தும் திமுகவுக்கு எதிராக ஏவப்படலாம். அனைத்தையும் எதிர்கொண்டு பணியாற்ற திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம். தீர்மானத்தை சபாநாயகரிடம் இன்று ஒப்படைக்கிறது திமுக.
திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலை., மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பேராசிரியர் லஷ்மன்குமார் சஸ்பெண்ட். மாணவியின் புகாரில் நடவடிக்கை.லஷ்மன்குமார் உடன் மாணவி தனியாக இருப்பதை மொபைலில் படம் பிடித்து, அவரை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் மற்றொரு பேராசிரியர் சேகர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸ் விசாரணை.
வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சனம்; சுதந்திர இயக்கத்தின் குரலாக வந்தே மாதரம் மாறியதாகவும் மக்களவையில் பேச்சு
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மாதம் ஒரு முறை மட்டும் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு.போக்குவரத்து துறையில் வேலையை வாங்கி தர பணம் பெற்றுக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மேலும் ஜாமீன் தளர்வுகளை வழங்கியது உச்ச நீதிமன்றம்.
ஐதராபாத்தில் அமெரிக்க துணை தூதரகத்தை ஒட்டிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் சூட்டப்பட்டது. மேலும் உலகளாவிய தொழில்நுட்ப முதலீட்டை அங்கீகரிக்கும் வகையில், வேறு ஒரு முக்கிய சாலைக்கு "கூகுள் ஸ்ட்ரீட்" என்று பெயரிட்டனர்.
அண்ணாமலை நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய நிலையில் இன்று கோவையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு
தவெக தலைவர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடன், காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி சந்திப்பு. நண்பர் என்ற முறையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்ததாக திருச்சி வேலுசாமி தகவல்
திமுகவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சிபிஐ, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம்; மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மேற்கு வங்கத்தில் தேர்தல் வருவதால் வந்தே மாதரத்தை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு; எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் கடந்த காலத்தை மட்டுமே பிரதமர் பேசுவதாகவும் விமர்சனம்
அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1000 கோடி அளவுக்கு டெண்டர் முறைகேடு; வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமைச்செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை கடிதம்
திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அமலாக்கத்துறையை ஏவல் துறையாக்கியுள்ளது; அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை
நாட்டின் பல்வேறு நகரங்களில் இண்டிகோ விமான சேவைகள் இன்றும் ரத்து; 24 மணிநேரத்திற்குள் உரிய விளக்கத்தை அளிக்க இண்டிகோ நிறுவனத்திற்கு டிஜிசிஏ ஆணை.விமானச் சேவை விதிமீறல் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்; மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு உறுதி.
விமான சேவை பாதிப்பு தொடர்பாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை என விமான போக்குவரத்து இயக்குநகரத்திடம் கால அவகாசம் கோரி உள்ளது இண்டிகோ நிறுவனம்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் ரூ.1,020 கோடி ஊழல் - இபிஎஸ் குற்றச்சாட்டு
ராணுவத்தில் ஆள்சேர்க்க வெளிநாட்டினரை குறிவைக்கும் ரஷ்யா - பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு
சபரிமலையில் விரைவில் ரோப் கார் சேவை அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு.பம்பை ஹில்டாப்பில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.271 கோடி செலவில், ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்கத் திட்டம்
டிச.11 முதல் 18 வரை 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 27 மொழிகளில் இருந்து 122 படங்கள் திரையிடப்படவுள்ளதாக அறிவிப்பு
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த தொல்லியல் துறை சான்றுகள் அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்.
கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில், அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
ஒடிசாவின் கட்டாக் மைதானத்தில் இன்று முதல் டி20 போட்டி இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை . ஒருநாள் தொடரை வென்ற நிலையில், இருபது ஓவர் தொடரையும் வெற்றியுடன் இந்தியா தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Tags: தமிழக செய்திகள்
