Breaking News

இன்றைய முக்கிய செய்திகள் Headlines Today Tamil News

அட்மின் மீடியா
0

 இன்றைய முக்கிய செய்திகள் Headlines Today Tamil News



நெல்லையில் இன்று நடைபெறும் விழாவில் 44,924 பேருக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - 100 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கி உரையாற்ற ஏற்பாடு

மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி! மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பெயரை ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' என ஒன்றிய அரசு மாற்றிய நிலையில் நடவடிக்கை.

தமிழகத்தில் 24-ஆம்தேதி வரை குளிர் அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் தகவல் - குறைந்த பட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பு

ககன்யான் திட்டத்திற்கான இஸ்ரோவின் பாராசூட் சோதனை வெற்றி! விண்வெளிக்கு சென்று பூமி திரும்பும் வீரர்களின் விண்கலன் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட பாராசூட் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இன்று கூடுகிறது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அசாம் மாநிலத்தில் 10,600 கோடி ரூபாயில் உருவாக உள்ள அம்மோனியா உர ஆலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி - பிரம்மபுத்ரா நதி பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் பலன் பெறும் வகையில் திப்ரூகரில் நடைபெறும் விழாவில் துவக்கம்

சென்னையில் இன்று 2வது நாளாக வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்.வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், 18 வயதை பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விண்ணப்பிக்கலாம்.

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில், 49ஆவது புத்தக காட்சி வருகிற ஜனவரி மாதம் 8ஆம் தேதி தொடங்குகிறது. நுழைவு கட்டணம் இன்றி வாசகர்களை அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக, பபாசி அறிவிப்பு.

நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உச்சம். முட்டை ஒன்றின் விலை 6 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம்.

வங்கதேசத்தில் மாணவர் சங்க தலைவர் கொலையால் மீண்டும் வெடித்த வன்முறை. அதிரடி நடவடிக்கைகளால் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்த பாதுகாப்பு படை.

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை.... இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபிக்கும் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்...

தேர்தல் நெருங்கும் நிலையில் த.வெ.க. சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக விஜய் ஆலோசனை - கூட்டத்தில் N. ஆனந்த் பங்கேற்காத நிலையில் செங்கோட்டையன் உள்ளிட்டோருடன் விவாதித்தாக தகவல்

டிட்வா புயலால் பாதிப்புகுள்ளான இலங்கைக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து உதவிகள். முல்லைத்தீவு பகுதியில் வசிக்கும் மீனவ மக்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம்.

மோடி அரசின் கைப்பாவையாகிவிட்ட தேர்தல் ஆணையம் நடத்தும் SIR நடவடிக்கை, வாக்குரிமையைப் பறிப்பதற்கான சதிதான் என்பது உண்மையாகிவிட்டது. SIR நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில்தான் வாக்குரிமை அதிகம் பறிக்கப்பட்டுள்ளது. சனாதனவாதிகள் தமிழ்நாட்டைக் குறிவைத்து களம் இறங்கியிருப்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! 'ECI <space> 2 EPIC ' (..:- ECI SXT000001) என டைப் செய்து '1950' என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும்.

துபாயில் இன்று நடைபெறுகிறது U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்று - 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் ரூ.56.36 கோடி மதிப்பீட்டில், 55,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வயநாடு அருகே புலி தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு. சகோதரி கண்முன்னே புதருக்குள் இழுத்துச் சென்று கொன்ற கொடூரம்.

ஒருவர் மதத்தின் பெயரால் உங்களின் உணர்வுகளை தூண்டுகிறார் என்றால் அவரை சந்தேகப்படுங்கள் நெல்லை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கடும் பனியால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம். ஹெலிகாப்டர் இறங்க முடியாததால் பாதி வழியில் திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி.

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயனின் கார் மோதி விபத்து. போக்குவரத்து நெரிசலின்போது முன்னே சென்ற கார் மீது மோதியதால் பரபரப்பு.

கடந்த சில நாட்களாக உயர்ந்துகொண்டே வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு; தற்போதைய சொத்து மதிப்பு 749 பில்லியன் அமெரிக்க டாலர். இரண்டாம் இடத்தில் இருக்கும் கூகுளின் லேரி பேஜை ($252.7 பில்லியன்) விட இது 3 மடங்கு அதிகம்.


https://erolls.tn.gov.in/asd/

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/12/draft-voter-list-2025.html

S.I.R-க்கு பின்  நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் விபரங்களை பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/12/sir-sir-deleted-list-tamil-nadu.html

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/12/puducherry-voter-list-2025.html

ஆன்லைனில் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/12/apply-for-voter-id-card-online.html

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/12/how-to-download-voter-id-online.html

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback