வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லாதவர்கள் என்ன செய்யவேண்டும் முழு விவரம்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா - நீங்கள் செய்யவேண்டியது இதுதான்
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in இணையதளம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து வரைவு வாக்காளர் அட்டை விவரங்களை பார்க்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லாதவரகள் செய்யவேண்டியது என்ன:-
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் இணையதளம் மூலமாகவும் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
பெயர் சேர்ப்பதற்கு, ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6 உள்ளது. அவர்களிடமிருந்து படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே திருப்பி வழங்கலாம்.
புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்
வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் நீக்கம்? தெரிந்து கொள்வது எப்படி
https://www.adminmedia.in/2025/12/blog-post_34.html
Tags: தமிழக செய்திகள்
