Breaking News

தமிழ்நாடு அரசில் கள உதவியாளர் பணி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம் TN MRB Field Assistant Recruitment Online Form 2025

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசில் கள உதவியாளர் பணி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம் TN MRB Field Assistant Recruitment Online Form 2025

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 41 கள உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது


தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் கள உதவியாளர் பதவிக்கு 41 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவியின் பெயர் :-

கள உதவியாளர்

வயது வரம்பு:-

01.07.2025 தேதியின்படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபடியான வயது வரம்பு என பிரிவிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:-

12-ம் வகுப்பு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் 1 வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

இப்பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

மாத சம்பளம்:-

ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://tnmrbfaw25.onlineregistrationform.org/MRBFAWDOC/Advertisement_Notification.pdf



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback