இனி ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம் வருகிறது புதிய விதி
இனி ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம் வருகிறது புதிய விதி
BIG BREAKINGUIDAI is set to BAN hotels, event organisers and private entities from collecting or storing Aadhaar photocopies.They must now register with UIDAI and use QR-based or app-based digital verification instead.
ஆதார் நகல்களை விடுதி போன்ற இடங்களில் வாங்குவதை தடை செய்யும் வகையில் புதிய விதி அமுலுக்கு வர உள்ளது.
இந்தியாவில், ஆதார் அட்டை குடிமக்களின் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுகிறது.வங்கி கணக்கு தொடங்குவது தொடங்கி விடுதிகளில் அறை எடுப்பது வரை பல இடங்களில் ஆதார் நகல்களை வழங்க வேண்டிய தேவை உள்ளது.
இந்நிலையில், விடுதிகள் போன்ற இடங்களில் ஆதார் நகல்களை பெறவும், சேமிக்கவும் தடை விதிக்கும் வகையில் புதிய விதி அமுலுக்கு வர உள்ளது.
ஆதார் நகலை சேமிப்பதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதால், தனியுரிமைக்கு எதிரானது என கூறி இந்த புதிய விதியை அமுல்படுத்த UIDAI முன்வந்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
ஆஃப்லைனில் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், UIDAI யில் பதிவு செய்து, API அணுகலைப் பெற்று, அதன் மூலம் டிஜிட்டல் முறையிலே ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.
பயனர்கள் ஆதார் செயலி மூலம் தங்களது ஆதார் தகவலை வழங்கினால் போதுமானதாகும். QR Code மூலம் ஸ்கேன் செய்து சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும். இதற்கான புதிய செயலியை UIDAI சோதனை செய்து வருகிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலானால் யாருக்கும் ஆதார் புகைப்பட நகலை சேகரிக்கும் உரிமை கிடையாது. இது தரவு கசிவு அபாயத்தை குறைக்கவும், தனிநபர் தகவல் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும்
Tags: தமிழக செய்திகள்
