தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம்
தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
புதுச்சேரியில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்தார்.
பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ர தொடக்க விழாவில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகளை அறிமுகம் செய்தார். இந்த தொடக்க விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர்.
கட்சி கொடி:-
கையில் வேலுடன் சிங்க முத்திரை பதித்த கொடிஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் உருவானது லட்சிய ஜனநாயக கட்சி.நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள், நெற்கதிருடன் LJK என பதிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம்.கட்சியின் கொடிக்கு மும்மத பூஜை செய்யப்பட்டது.
லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி அறிமுக விழாவில் 64 படகுகள் LJK வடிவத்தில் கடலில் பிரம்மாண்டமாக அணிவகுத்து நின்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
Tags: புதுச்சேரி செய்திகள்


