Breaking News

2026 முதல் ஜும்மா நேரம் மாற்றம் அமீரக அரசு அறிவிப்பு..!! UAE to change Friday prayer timings from January 2026

அட்மின் மீடியா
0

2026 முதல் ஜும்மா நேரம் மாற்றம் அமீரக அரசு அறிவிப்பு..!! UAE to change Friday prayer timings from January 2026

ஐக்கிய அரபு அமீரகத்தின் இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள் மற்றும் ஜகாத் பொது ஆணையம், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் சிறப்பு ஜூம்ஆ தொழுகைக்கான ஒருங்கிணைந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. 

இந்த புதிய அறிவிப்பு ஜனவரி 2, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய அட்டவணையின் கீழ், வெள்ளிக்கிழமை தொழுகை பிற்பகல் 12:45 மணிக்கு அதாவது தற்போதுள்ள நேரத்தை விட அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2022 முதல் அமீரகத்தில் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக சனி, ஞாயிறு விடுமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெள்ளிக்கிழமையில் ஒரே நேரத்தில் ஆண்டு முழுவதும் தொழுகை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமீரக அரசு இந்த புதிய நேர மாற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback