Breaking News

உ.பியில் 2 நிமிடத்தில் ATM இயந்திரத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் வைரலாகும் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

 உ.பி மாநிலம் மொதராபாத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி ATM இயந்திரத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள்



கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அதிகாலையில், காரில் வந்த குற்றவாளிகள் லோகோஷெட் பாலம் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம்-ஐ இயந்திரத்தை வெறும் 2 நிமிடத்தில் கயிறு கட்டி இழுத்து எடுத்துச் சென்றனர். 

அந்த ஏடிஎம்-ல் ஏழு லட்சம் ரூபாய் இருந்தது. சம்பவம் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். 

இன்று காலை சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள சட்டா பாலம் அருகே ஏடிஎம்-ஐ கொள்ளையடித்த குற்றவாளிகள் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் வந்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். குற்றவாளிகள் போலீஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  போலீசார் கொள்ளையடித்த ஐந்து குற்றவாளிகளுடன் போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இறுதியில் தன்சீம் மற்றும் மாத்திம் ஆகியோரின் காலில் போலீசார் சுட்டு, ஐந்து பேரையும் கைது செய்தனர். திருடப்பட்ட பணமும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொள்ளயர்கள் ATM இயந்திரத்தை கொள்ளையடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/SachinGuptaUP/status/1998361118922985612

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback