41 குடும்பங்களுக்கும் மாதா மாதம் ரூ. 5000.. ஆயூள் காப்பீடு, வேலை வாய்ப்பு இலவச கல்வி - தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் மரிய வில்சன் அறிவிப்பு
41 குடும்பங்களுக்கும் மாதா மாதம் ரூ. 5000.. ஆயூள் காப்பீடு, வேலை வாய்ப்பு இலவச கல்வி - தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் மரிய வில்சன் அறிவிப்பு
கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சமும் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்திருந்தது
இதனிடையே, கரூரில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தவெக தரப்பில் தலா ரூ. 20 லட்சமும், மத்திய அரசு தரப்பில் தலா ரூ. 2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தவெகவைச் சேர்ந்தவரும் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவருமான மரிய வில்சன் வெளியிட்டுள்ளஅறிக்கையில், நாங்கள் அறிவித்தபடி, கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டான பலன் சென்று சேர வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறேன்.
அக்குழு இன்று அவர்களைச் சந்திக்கிறது. ஏற்கனவே நான் அறிவித்தபடி, கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும், ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி 5,000/- ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்/தலைவியின் வாழ்நாள் முழுக்க வழங்க இருக்கிறேன். இன்று முதல் என் குழுச் செயற்பாட்டை ஆரம்பிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்டிருந்த இன்னொரு அறிக்கையில், கரூர் துயர சம்பவம் இன்றும் என் இதயத்தைக் கடைந்துகொண்டே இருக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ஈடாக நாம் எதையும் செய்துவிட முடியாது. ஆனால் அவர்களின் கனவுகளை நிறைவேற்றத் துணைநிற்க முடியும். அந்த வகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான பள்ளி, கல்லூரிச் செலவுகளை ஏற்கவும், எங்கள் குழுமத்தில் வேலை வாய்ப்பை வழங்கவும், ஆயுள் காப்பீடு செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். காயம்பட்ட இதயங்களுக்குக் களிம்பு தடவும் என்னுடைய சிறு முயற்சி இது என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள்