மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்தார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி - நடந்தது என்ன
அட்மின் மீடியா
0
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலைச் சென்னையிலிருந்து விமானம்மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி. எஸ் பி வேலுமணி ஆகியோரும் சென்றனர். இந்தநிலையில், டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்
ஏற்கனவே செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து வருகிறார். அதிமுகவை ஒருங்கிணைக்கச் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், இன்று மூத்த தலைவர்களுடன் சென்று அமித்ஷாவுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஈபிஎஸ் உடன் சென்ற திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் உள்ளிட்டோர் புறப்பட்ட நிலையில் அமித்ஷா உடன் ஈபிஎஸ் தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.
சுமார் ஒரு மணி நேரமாக அமித்ஷாவுடன் தனியே ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக உட்கட்சி பிரச்னை தொடர்பாக ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலோசனைக்கு பின் அமித்ஷா வீட்டிலிருந்து காரில் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிய படி வெளியே வந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது
Tags: அரசியல் செய்திகள்