Breaking News

தண்ணீரில் இருந்து எரிவாயு கேஸ் உருவாக்கி சாதனை முழு விவரம்

அட்மின் மீடியா
0
தண்ணீரில் இருந்து எரிவாயு கேஸ் உருவாக்கி சாதனை 

சேலம் மாவட்டம் பேலூரை சேர்ந்த ராமலிங்கம் கார்த்திக். இவர் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைன் பிரித்து அதன் மூலம் மாற்று எரிசக்தியை உருவாக்கி இருக்கிறார்.



HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் சார்பில் HONC Gas Generator குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதில், உலகிலேயே முதல் முறையாக, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்து நேரடியாக எரியூட்டக் கூடிய பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி செய்யும் HONC Gas நிறுவனத்தின் புதிய மாற்றத்திற்கு வித்திடும் செயல்திறன் குறித்து மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. 

மேலும், மேம்பட்ட Gyroid Electrolytic Medium (GEM) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி HONC Gas Generator மூலமாக தனித்துவமான ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி செய்வது எப்படி என்று செயல்விளக்கத்தின் போது விளக்கிக் காட்டினோம். மரபு ரீதியான புதைவடிவ எரிபொருள்கள் அல்லது LPG போல அல்லாமல் HONC Gas எரிபொருளை நமக்கான தேவையின்போது உற்பத்தி செய்து கொள்ள முடியும், 

இதை சேமித்து வைக்க சிலிண்டர்கள் தேவையில்லை மற்றும் எரிவாயு கசிவு அல்லது வெடிக்கும் ஆபத்து போன்றவை முற்றிலுமாக தவிர்க்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான திரு. பேளூர் ராமலிங்கம் கார்த்திக் பேசும்போது, 

இந்த புரட்சிகர தொழில்நுட்பம் ஒரு மாற்று எரிசக்தி மட்டுமல்ல, எரிபொருள் துறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. வெறுமனே ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் மிகக் குறைவான மின்சாரத்தைக் கொண்டு, தொழிற்சாலைகளுக்கும், வீடுகளுக்கும் முற்றிலும் மாசற்ற தூய்மையான எரிபொருளை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். HONC Gas பயன்பாடு என்பது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளைக் கடந்து பல தரப்பட்ட இடங்களில் பயன் தரக் கூடியது.

steam turbine generators மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வாகனங்களுக்கான பாதுகாப்பு நிறைந்த, செயல்திறன் மிக்க, மாசற்ற எரிபொருள்களை வழங்கி ஆட்டோமொபைல் துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திறன் HONC Gas ஜெனரேட்டர்களுக்கு உண்டு. ஆக, வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தக் கூடிய எல்லாவற்றுக்கும் பொருத்தமான எரிபொருளை HONC Gas மூலமாக உற்பத்தி செய்ய இயலும்.

இந்தப் புதிய கண்டுபிடிப்பை இந்தியாவில் இருந்து உலகிற்கு அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சமையல் எரிவாயு, தொழிற்சாலைகளுக்கான பாய்லர்கள், பெரிய அளவிலான எரிசக்தி உற்பத்தி கூடங்களிலும் கூட பயன்படுத்தப்படுவதற்கான செயல்திறன் HONC Gas ஜெனரேட்டர்களில் உண்டு. நிலையான எரிசக்தி துறையில் இந்தியாவை உலகை வழிநடத்தும் நாடாக நிலைநிறுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

உலகப்பயன்பாட்டில் ஹைட்ரஜன் தேவை அதிகமாக இருக்கின்ற நிலையில் இதுவரை ஹைட்ரஜனை வாங்கி அதிலிருந்துதான் பேட்டரி பயன்பாடு உள்ளது என்றும் ஹட்ரஜனை உருவாக்கி அதனை எரிபொருளாக மாற்றும் சக்தியாக கண்டுபிடித்துள்ள இந்த கண்டுபிடிப்பு உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback