கரூர் கூட்ட நெரிசல் 39 பேர் மரணம்- புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது
அட்மின் மீடியா
0
புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் (& Others) மீது வழக்கு பாய்ந்தது
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 25,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.
கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் கரூர் நகர காவல் நிலையம்- u/s 105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act
A1. மதியழகன் – கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்
A2. புஸ்ஸி ஆனந்த்
A3. நிர்மல் குமார்
& others.
BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.
BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.
BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை
BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.
TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்
ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு...