அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் - மாம்பழம் சின்னமும் ஒதுக்கீடு
அட்மின் மீடியா
0
அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் - மாம்பழம் சின்னமும் ஒதுக்கீடு
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கிடையில் கருத்து மோதல் காரணமாக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.
பாமகவில் இருந்து அன்புமணியை முழுமையாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார்.
மேலும், விரைவில் பாமக பொதுக்குழு கூட்டப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞரும், அன்புமணியின் ஆதரவாளருமான பாலு, 2026 வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார் என்ற பாமக பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் கடிதம் தங்களது கடிதம் அனுப்பியுள்ளது என்று கூறி அந்த கடிதத்தை காட்டியதுடன், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னம் வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அன்புமணியை தலைவராக ஏற்பவர்கள் மட்டுமே பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும் என்ற பாலு, 2026 வரை பாமக தலைவராக அன்புமணியே நீடிப்பார் என்றவர், பிரிந்திவர்கள், விலகியவர் மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்த பாலு, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா போன்றோர் கட்சி பதவியில் தொடர்வார்கள் என்றும் கூறினார்.
Tags: அரசியல் செய்திகள்