Breaking News

இனி போக்குவரத்து அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்சூரன்ஸ் புதுப்பிக்கலாம்: டிராபிக் போலீஸ் அதிரடி

அட்மின் மீடியா
0

இனி போக்குவரத்து அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்சூரன்ஸ் புதுப்பிக்கலாம்: டிராபிக் போலீஸ் அதிரடி



போக்குவரத்து அபராத தொகையை ஏராளமான வாகன ஓட்டிகள், ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்த அபராதத் தொகையை வசூலிக்க, ஒவ்வொரு போக்குவரத்து உதவி கமிஷனர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள, கால் சென்டர் ஊழியர்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், வாகன ஓட்டிகள் பலரும் அபராதத் தொகையை செலுத்த முன்வராததால் போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை ரூ.300 கோடி வரை செலுத்தப்படாமல் உள்ளதால், நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சென்னை மாநகரக் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் பக்கத்தில், வாகன பதிவு எண்ணை உள்ளீடு செய்து இன்சூரன்ஸை புதுப்பிக்க வேண்டும். அப்படி புதுப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு அபராத தொகை செலுத்தப்படாமல் இருந்தால், அதை உடனடியாக செலுத்தும்படி அறிவுறுத்தப்படும்.

நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே, வாகனத்திற்கான இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும். நேரடியாகச் சென்றாலும், ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முயன்றாலும், அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே இனி இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback