Breaking News

தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை? எதிர்பார்ப்பில் மக்கள்- முழு விவரம்

அட்மின் மீடியா
0

தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை முழு விவரம்

தீபாவளிக்கு தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதற்கான சூழல் உருவாகி உள்ள நிலையில், அரசு ஊழியர்களும், பொதுமக்களும் குஷியில் உள்ளனர். 

 தமிழக அரசு தீபாவளி, பொங்கல் விடுமுறை சமயங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவித்திருந்தது. 

தற்போது தேர்தல் வேறு நெருங்கி வருவதால் இம்முறையும் தமிழக அரசுக்கு தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமான விடுமுறை நாள் கணக்கில் வந்துவிடுகிறது. 

தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவித்தால், தொடர்ந்து 4 நாட்கள் தீபாவளிக்கு விடுமுறை கிடைத்து விடும்.

தீபாவளியை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடிவிட்டு வருபவர்களுக்கு இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பது பண்டிகையைக் கொண்டாட வசதியாக இருக்கும். 

அக்டோபர் 18: சனிக்கிழமை (வார விடுமுறை)

அக்டோபர் 19: ஞாயிற்றுக்கிழமை (வார விடுமுறை)

அக்டோபர் 20: திங்கட்கிழமை (தீபாவளி)

அக்டோபர் 21: செவ்வாய்க்கிழமை (அரசு விடுமுறை அறிவித்தால்)

இம்முறை தீபாவளிக்கான விடுமுறையை முன்கூட்டியே அறிவித்தால், சொந்த ஊருக்கு செல்பவர்கள் ரயில், பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு என தங்களது பயணத்தை திட்டமிட வசதியாக இருக்கும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback