Breaking News

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Data Entry Operator வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0


மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.




கல்வித்தகுதி.

1. உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator)

12th pass from a recignized Board/Equivalent Board with Diploma certificate in computers.

-Typewriting skills - Higher Grade in Tamil and English.

Weightage for work experience candidate.

2. வயது: 01.01.2025 அன்றுள்ள படி 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. : Rs.13,240 /- (per month)

மேலும் இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட இணையதளத்தின் https://tirupathur.nic.in வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் செய்தி வெளியீடு செய்த 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5-வது தளம், B- பிளாக் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் மாவட்டம் -635601. மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

விண்ணபங்களை உரிய சான்றுகளின் ஒளி நகலுடன் தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ பத்திரிக்கை செய்தி வெளியான நாளிலிருந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும்.இது தொடர்பான எந்தவொரு கடித போக்குவரத்தும் மேற்கொள்ளப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2025/09/17574962169902.pdf

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback