Breaking News

நாளையுடன் முடியும் 10 நாள் கெடு - அதிமுக ஒன்றினையுமா - அடுத்து என்ன நடக்கும்

அட்மின் மீடியா
0

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில்  கடந்த 5ஆம் தேதி அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். இந்த ஒருங்கிணைப்பு பணியைச் செய்யச் செய்யாவிட்டால், அதைத் தானே எடுத்துச் செய்வேன் எனவும் கூறியிருந்தார்.



அவரது கருத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.இதனையடுத்து கெடு விதித்த இரண்டே நாளில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளைப் பறித்து உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதற்க்கு அடுத்தநாள் ஹரித்வார் செல்வதாகக் கூறி டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே அதிமுகவை ஒன்றிணைக்க கோரி எடப்பாடிக்கு விதித்த கெடு இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ளது. இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடப்பாடி எடுக்காத நிலையில், செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது அக்கட்சியினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback