Breaking News

கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு

அட்மின் மீடியா
0

கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு

யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்பச் செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, காப்பீட்டு பிரீமியம், பங்குச்சந்தை முதலீடு, கடன் தவணை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட நிறுவனங்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு முதலில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்தது. 

அதை தற்போது, ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி, காப்பீட்டு பிரீமியம், பங்குச்சந்தை முதலீடு, கடன் தவணை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட நிறுவனங்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு முதலில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்தது. அதை தற்போது, ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback