Breaking News

தட்கல் டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 1 முதல் புதிய விதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

தட்கல் டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 1 முதல் புதிய விதி முழு விவரம்

முதல் 15 நிமிடம் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு - அக்டோபர் 1 முதல் புதிய விதி


ஐஆர்​சிடிசி தளத்​தில் ஆதார் எண்ணைப் பதிவு செய்த பயணி​கள் மட்​டுமே முதல் 15 நிமிடங்​கள் ரயில் டிக்​கெட்டை முன்​ப​திவு செய்ய முடி​யும். 

தின​மும் அதி​காலை 12.20 மணி முதல் இரவு 11.45 மணிவரை ரயில் டிக்​கெட்​டு​களை ஆன்​லைனில் முன்​ப​திவு செய்​ய​லாம். 

ரயில் டிக்​கெட் முன்​ப​தி​வில் முறைகேடுகளைத் தடுக்க அக்​டோபர் 1 முதல் புதிய நடை​முறை அமல் செய்​யப்பட உள்​ளது. 

இதன்​படி ஐஆர்​சிடிசி இணை​யதளம், செயலி​யில் ஆதார் எண் சரி​சார்ப்பு மூலம் டிக்​கெட் வழங்​கும் நடை​முறை அமலுக்கு வரு​கிறது.

ஆதார் எண்ணைப் பதிவு செய்த பயணி​கள் மட்​டுமே முதல் 15 நிமிடங்​கள் ரயில் டிக்​கெட்டை முன்​ப​திவு செய்ய முடி​யும். இதர பயணி​கள் 15 நிமிடங்களுக்குப் பிறகு டிக்​கெட் முன்​ப​திவு செய்ய அனு​ம​திக்​கப்​படு​வர். இவ்​வாறு ரயில்வே அமைச்சக அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

ஐஆர்​சிடிசி தளத்​தில் ஆதாரை பதிவு செய்ய ஐஆர்​சிடிசி இணை​யம், செயலியில் எனது கணக்கு (My account) தளத்​தில் சரி​பார்ப்பு (Authenticate user) பகு​தியை கிளிக் செய்ய வேண்​டும். 

இதன்​பிறகு ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்​டும். உங்​களது செல்​போன் எண்​ணுக்கு பாஸ்​வேர்டு வரும். அந்த பாஸ்​வேர்டை உள்​ளீடு செய்ய வேண்​டும்.

ரயில் டிக்​கெட் முன்​ப​திவு மையங்​களுக்கு நேரில் செல்​பவர்​கள் ஆதார் எண்ணை அளிக்க வேண்​டும். அவர்​களின் மொபைல் போனுக்கு பாஸ்​வேர்டு வரும். அதை உள்​ளீடு செய்து ரயில் டிக்​கெட்டை பெறலாம். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback