Breaking News

23 லட்சத்தில் UAE கோல்டன் விசா என பரவும் தகவல் உணமை என்ன Golden Visa of Dubai

அட்மின் மீடியா
0

23 லட்சத்தில் UAE கோல்டன் விசா என பரவும் தகவல் உணமை என்ன Golden Visa of Dubai

கோல்டன் விசா என்றால் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரையில், அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகிறது. 

ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கவுரவமாக நடத்தப்படுவார்கள். இதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் இந்த கோல்டன் விசாவினை பெற்றுள்ளனர். 

பரவிய செய்தி:-

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை எளிதாக்கியுள்ளது. 

ரூ.23 லட்சம் (1 லட்சம் திர்ஹாம்) செலுத்தினால், குடும்பத்துடன் நிரந்தரமாக தங்குவதற்கு வழிவகை செய்யும் கோல்டன் விசாவைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விசா மூலம் இந்தியர்கள் அமீரகத்தில் வேலை செய்யவும், தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் முடியும். 

பழைய கோல்டன் விசா திட்டங்களில் கோடிக்கணக்கான முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் புதிய திட்டத்தில் நிலம் வாங்க, வணிக உரிமம் பெற, சொத்து வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என செய்திகள் வெளியானது

உண்மை என்ன:-

ரூ.23.30 லட்சம் கட்டணம் செலுத்தி கோல்டன் விசாவை பெறலாம் என்ற தகவலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

ஐக்கிய அரபு எமிரேட்சின் கோல்டன் விசா பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை எனவும் யாரும் நம்பவேண்டாம் எனவும் எந்த ஒரு தனியார் நிறுவனத்தையும் அங்கிகரிக்கவில்லை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெளிவு படுத்தியுள்ளது என கலிஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

ஆதாரம் பார்க்க 

https://www.khaleejtimes.com/uae/golden-visa-applicants-official-channels

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback