பாலஸ்தீனம் இனி தனி நாடு... பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு.! emmanuel macron recognize palestine
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு மேக்ரான் இது குறித்து எழுதியுள்ள கடிதத்தில் ”காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் போர் நிலவிவரும் சூழலில், இரு தேசத் தீர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை கோபப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் முடிவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலிய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு அவமானமாக கருதப்படுகிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
மேலும், பிரான்சின் முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமைதி முன்னெடுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்