மும்பையில் அதிர்ச்சி ஆட்டோவுக்குள் இருந்த சிறுவன் மீது பிட் புல் நாயை விட்டு கடிக்க வைத்த நபர் அதிர்ச்சி வீடியோ
மும்பையில் அதிர்ச்சி ஆட்டோவுக்குள் இருந்த சிறுவன் மீது பிட் புல் நாயை விட்டு கடிக்க வைத்த நபர் அதிர்ச்சி வீடியோ
மும்பையில் வளர்க்கும் செல்ல நாய் சிறுவனை கடித்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன,
இதில் சிறுவன் ஆட்டோவில் அமர்ந்திருக்க, பிட்புல் ரகத்தைச் சேர்ந்த நாய் அவனை கடிப்பதைப் பார்க்க முடிகிறது. வீடியோவில், சிறுவன் பயத்தில் உறைந்துபோக, நாயின் உரிமையாளர் சிரித்துக் கொண்டிருக்கிறார்.இந்த சம்பவம் மும்பையின் மங்குர்த் பகுதியில் நடந்துள்ளது.
சிறுவனை நாய் தாக்கியது மட்டுமின்றி, அதை வீடியோ எடுக்கும் மற்றவர்களும் சிறுவனுக்கு உதவாதது வேதனையான விஷயம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், மும்பையில் சமீபகாலமாக நாய் கடித்த சம்பவங்கள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1947139170306269485
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ