Breaking News

கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நம்பவைத்த மனைவி - இன்ஸ்டா சாட்டிங்கில் அம்பலமான கொலை!

அட்மின் மீடியா
0

கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நம்பவைத்த மனைவி - இன்ஸ்டா சாட்டிங்கில் அம்பலமான கொலை!

மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அறியப்பட்ட கரன் தேவ் (36), தன் மனைவி சுஷ்மிதா மற்றும் உறவினர் ராகுலால் கொலை செய்யப்பட்டது. இன்ஸ்டாகிராம் Chat மூலம் அம்பலமாகி உள்ளது



முதலில் சுஷ்மிதா,கரனுக்கு அதிகளவு தூக்க மாத்திரை கொடுத்ததும்,மாத்திரை வேலை செய்ய தாமதமானதால் பயத்தில் ராகுலிடம் இன்ஸ்டா மூலம் உதவி கேட்டதும், மயக்கத்திலிருந்த கரனுக்கு இருவரும் திட்டமிட்டு கரண்ட் ஷாக் கொடுத்து இயற்கை மரணம் போல சித்தரித்ததும் இன்ஸ்டா சாட் மூலம் அம்பலம்.

டெல்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கரண் தேவ் என்பவர் ஜூலை 13ம் தேதி அன்று வீட்டில் மின்சாரம் பாய்ந்து மூர்ச்சையானதாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவரை பரிசோதித்த மாதா ரூபராணி மாகோ மருத்துவமனை மருத்துவர்கள் அவர் இறந்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து மரணம் குறித்து மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்ததாலும் இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே இறந்துபோன கரண் தேவின் சகோதரன் தனது அண்ணன் மரணம் குறித்து  அவரது மனைவியும் உறவினர் ராகுலும்  இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரனையில் சுஷ்மிதாவும் ராகுலும் இன்ஸ்டா சாட்டிங்கில்  அனுப்பிய தகவல்களும் போலீசாரிடம் சிக்கியது.

அதன் பின்பு கரண்தேவுக்கு தூக்க மாத்திரை கொடுத்ததையும் பின்னர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததையும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.இந்த விவகாரம் தொடர்பாக சுஷ்மிதா மற்றும் ராகுல் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரணின் உடற்கூறாய்வு அறிக்கைகள் கிடைத்ததும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback