Breaking News

துபாய் நாட்டில் உள்ள கல்யாண் ஜூவல்லரி நகை பற்றி வலம் வரும் வீடியோ உண்மை என்ன முழு விவரம் dubai kalyan jewellers fake news

அட்மின் மீடியா
0

துபாய் நாட்டில்  உள்ள கல்யாண் ஜூவல்லரி நகை பற்றி வலம் வரும் வீடியோ உண்மை என்ன முழு விவரம் dubai kalyan jewellers fake news

சமூக வலைதளங்களில் பரவும் செய்தி:-

குவைத்தை தொடர்ந்து துபாயில் நடந்த சோதனையிலும் கல்யாண் ஜூவல்லரி ல் உள்ள நகை களில் இரும்பு கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இந்த இரு நாடுகளிலும் கல்யாண் ஜூவல்லரிக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது..

எனவே இனி நகை வாங்க எந்த கடைக்கு சென்றாலும் கையில் *காந்தத்தோடு( Magnet ) சென்று சோதனை செய்து வாங்குங்கள்.கீழ் கண்ட கல்யாண் ஜூவல்லரி வீடியோக்களை பாருங்கள் புரியும்..

உண்மை என்ன:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கல்யான் ஜுவல்லரியில் நடந்தது கிடையாது

கடந்த 24.07.2025 அன்று Kalyan Jewellers தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:-

சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கல்யாண் ஜுவல்லர்ஸ் குறித்த போலிச் செய்திக்குப் பின்னால் இருந்த குற்றவாளிகள் 2018ஆம் ஆண்டே கைது செய்யப்பட்டனர்” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ யூடியூப்பில் கடந்த 21.11.2017 அன்று பதிவிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. எனவே இந்த வீடியோ 2017 முதலே சமூக வலைதளங்களில் பரவி வருவது தெரியவந்தது.

அதேபோல் கடந்த 30.03.2018 அன்று News Minute என்ற செய்தி நிறுவனம் Dubai cops act on those spreading fake news on quality of Kalyan Jewellers gold" என்ற தலைப்பில் மார்ச் செய்தி வெளியிட்டு இருந்தது. 

அதில் கல்யாண் ஜுவல்லர்ஸ் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 5 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

யூடியூப் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=QnYLvwNHPNA

கல்யான் ஜூவல்லரியின் மறுப்பு செய்தி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/KalyanJewellers/status/1948229507506479185

News Minute செய்தி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.thenewsminute.com/kerala/dubai-cops-act-those-spreading-fake-news-quality-kalyan-jewellers-gold-78764

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback