எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்சிங் வேலை வாய்ப்பு முழு விவரம்
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்சிங் வேலை வாய்ப்பு முழு விவரம்
புதுடெல்லி எய்ம்ஸ் மற்றும் இதர எய்ம்ஸ்களில் உரிய நிறுவனங்களில் இருக்கக் கூடிய நர்சிங் அதிகாரி பதவி, நிலை 07. சம்பளப் பட்டியல்-2- இன் படி முன்னதாக மாற்றப்பட்ட சம்பள விகிதப்படி ரூ.9300-34800 மற்றும் கிரேட் சம்பளம் ரூ.4600/- குரூப் பி பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான நர்சிங் அதிகாரி ஆட்சேர்ப்பு பொது தகுதி தேர்வுக்கான (NORCET) ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எய்ம்ஸின் இணையதளத்தில் www/aiimsexams.ac.in-22.07.2025 முதல் 11.08.2025 மாலை 5:00 மணி வரை ஆன்லைன் விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும்.
உ. இந்திய நர்சிங் கவுன்சில்/ மாநில நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி (ஹானர்ஸ்) நர்சிங்/ பி.எஸ்சி நர்சிங் படிப்பு
அல்லது
இந்திய நர்சிங் கவுன்சில்/ மாநில நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி (போஸ்ட் சர்டிபிகேட்) / போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் படிப்பு
b. மாநில/இந்திய நர்சிங் கவுன்சிலில் நர்ஸாக & மிட்வைஃபாக பதிவு செய்திருக்க வேண்டும்.
அல்லது
உ இந்திய நர்சிங் கவுன்சில்/ மாநில நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ போர்டு அல்லது வாரியத்தில் பொது நர்சிங் மிட்வைஃப்ரி பட்டயப்படிப்பு.
b. மாநில/இந்திய நர்சிங் கவுன்சிலில் நர்ஸாக & மிட்வைஃபாக பதிவு செய்திருக்க வேண்டும்.
C குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியுடையவர்கள் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருத்தல் மேற்கூறிய எய்ம்ஸின் தேர்வில் பங்கெடுக்கலாம்.
குறிப்புகள்: மேலே குறிப்பிட்டுள்ளபடி தேவையான இரண்டு வருட அனுபவம் ஓர் அத்தியாவசியமான அளவுகோலாகும். அது செல்லுபடியாகும் வகையில் அத்தியாவசிய தகுதியைப் பெற்ற பிறகு, கல்வியின் நேரடி பயிற்சியை முடித்த பிறகு,தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு இந்திய நர்சிங் கவுன்சில்/ மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அனைத்து எய்ம்ஸ்க்கும்: 18-30 வயதுக்கு இடையில் (வயது தளர்வு விவரங்கள் வயது தளர்வுக்கான பொது நிபந்தனைகள் உரிய நிறுவனத்தின்,மருத்துவமனையின் ஆட்சேர்ப்புக்கான விதிகளின் வயது தளர்வுகளைப் பொருத்தது.
விண்ணப்படிவம் முடிவடையும் கடைசி நாளில் அனைத்து வயதும் கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
www/alimsexams.ac.in
Tags: வேலைவாய்ப்பு