தகாத உறவுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்கும் காதலனுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பளித்த நீதிமன்றம்.!
தகாத உறவுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்ம் காதலனுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை தீர்ப்பளித்த நீதிமன்றம்.!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர். விஜய் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.
அபிராமி டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானார் பிரியாணி கடைக்காரர் மீனாட்சி சுந்தரத்துடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால், கள்ளக்காதலுடன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற அபிராமி முடிவு எடுத்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தனது கணவர் விஜய் மற்றும் அஜய், கார்னிகா ஆகியோரை கொலை செய்ய தூக்க மாத்திரைகளை வாங்கிய அபிராமி, அதைப் பாலில் கலந்து 3 பேருக்கும் இரவு கொடுத்துள்ளார். ஆனால் வீரியம் இல்லாததால் கார்னிகா மற்றும் உயிரிழந்து உள்ளார். வழக்கம்போல் விஜய் மறுநாள் காலை எழுந்து வேலைக்கு சென்றுள்ளார்.
அதேபோன்று மகன் அஜய் மயக்கத்தில் இருந்து உள்ளார்.அபிராமி, அஜய்க்கு மீண்டும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். அதன் பிறகு அஜய் உயிரிழந்ததை உறுதி, செய்த பிறகு வீட்டை விட்டு வெளியேறி கேரளாவிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்தபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்
இந்த வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
Tags: தமிழக செய்திகள்