பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் இல்லை ப வடிவ வகுப்பறை - பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் இல்லை ப வடிவ வகுப்பறை - பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
ப' வடிவில் பள்ளி வகுப்பறைகளை மாற்றி அமைக்க பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கேரளத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் வரிசைப்படி அமரவைக்கப்படாமல் 'யு' வடிவ முறையில் அமர வைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டிலும் அதுபோன்ற ஒரு திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. தற்போதைய நேரடி முறையிலான வடிவமைப்பினால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது ஆகவே எனவே 'ப' வடிவில் பள்ளி வகுப்பறைகளை மாற்றி அமைக்க பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
'ப' வடிவில் வகுப்பறை இருந்தால் மாணவர்களின் கவனம் ஆசிரியர் மீதும், கற்றல் மீதும் இருக்கும் எனக் கூறியுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரகம், கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் மாணவர்களிடம் இருக்காது என்றும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்