8-ம் வகுப்பு ,12 ம் வகுப்பு, டிகிரி, படித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிகப் கழகத்தில் வேலை TNCSC Recruitment 2025
8-ம் வகுப்பு ,12 ம் வகுப்பு, டிகிரி, படித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிகப் கழகத்தில் வேலை TNCSC Recruitment 2025
TNCSC Recruitment 2025 Notification Out for 450 Seasonal Bill Clerk, Seasonal Helper, and Seasonal Watchman posts
Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC) has released the Official Notification for the recruitment of Seasonal Bill Clerk, Seasonal Helper, and Seasonal Watchman posts. The TNCSC Recruitment 2025
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிகப் கழகம், திருநெல்வேலி மண்டலத்தில் நெல் கொள்முதல் பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருநெல்வேலி மண்டலத்தில் நெல் கொள்முதல் பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர். உதவுபவர் மற்றும் காவலர் கீழ்கண்ட கல்வித் தகுதிகளின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்குட்பட்டு பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill clerk), பருவகால உதவுபவர் (Seasonal Helper) பதவிக்கு ஆண் மற்றும் பெண்களிடமிருந்தும், பருவகால காவலர் (Seasonal watchman) பணிக்கு ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றியமைக்கப்பட்ட TamilNadu Civil Supplies Corporation Manual on Paddy Procurement rule chapter VII 16.3 & VII 16.4 ன்படி பருவகால பட்டியல் எழுத்தர்கள் மற்றும் பருவகால உதவுபவர்கள் கல்வி மதிப்பெண் பட்டியலுக்கு 50% மதிப்பெண்ணும், நேர்முக தேர்வுக்கு 50% மதிப்பெண் என்ற அடிப்படையிலும், பருவகால காவலர்களுக்கு 100% மதிப்பெண்களும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் நெல்கொள்முதல் தொடர்பானதும், முற்றிலும் தற்காலிகமானதாகும்.
பணி:-
பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill clerk),
பருவகால உதவுபவர் (Seasonal Helper)
பருவகால காவலர் (Seasonal watchman)
கல்வித்தகுதி:-
பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill clerk) பணிக்கு இளங்கலை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பருவகால உதவுபவர் (Seasonal Helper) பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
பருவகால காவலர் (Seasonal watchman) பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
எஸ்சி, எஸ்டிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 37 வயது வரையும்,
எம்பிசி, பிசி மற்றும் பிசி(எம்) ஆகிய பிரிவுகளுக்கு 34 வயது வரையும்,
ஒசி பிரிவில் 32 வயது வரையும் இருக்கலாம்.
விண்ணப்பிக்க:-
திருநெல்வேலி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மின்னஞ்சல் (Email-id) முகவரியினை விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அனைத்து தொடர்புகளும் (அழைப்பு கடிதம் போன்றவை) மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கப்படும் பதவியின் பெயரை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் :-
21.07.2025 அன்று மாலை 5.00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
தபால் முகவரி:-
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் |வாணிபக்கழகம்,
4, காமராஜர் சாலை, NH காலனி,
பெருமாள்புரம்,
பாளையங்கோட்டை (T.K.), திருநெல்வேலி-627007.
Tags: வேலைவாய்ப்பு