மெக்சிகோவில் பெய்து வரும் கன மழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு வைரல் வீடியோ
அமெரிக்கா நியூ மெக்சிகோவில் பெய்து வரும் கன மழையால் ரூடோசோ மலைப் பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு.
அமெரிக்கா: டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவையும் புரட்டிப் போடும் பெருமழை. ரூடோசோ மலைப் பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு.தாழ்வான பகுதிகளை விட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாகாண அரசு அறிவுறுத்தல். இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த கனமழையால், பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. 28க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 84 பேர் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
டெக்சாஸில் வசித்து வருபவர்கள் பலரும் தங்களது உடைமைகளை இழந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சான் அன்டோனியோ அருகே உள்ள கெர்கவுண்டியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
30 செ.மீ. அளவுக்கு பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்மட்டம் சுமார் 26 அடி உயர்ந்தது. இதனால் பல வாகனங்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது, ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1942789748394992010
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ