Breaking News

நாடு முழுவதும் நாளை பந்த் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு - பேருந்துகள் , ஆட்டோக்கள் ஓடுமா முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் நாளை பந்த் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு 


17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்தியாவில் உள்ள மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பு ஜூலை 9ஆம் தேதி “பாரத்பந்த்” அறிவித்துள்ளது. 

இந்த போராட்டம் தொழிலாளர் நலன் கருதியும், விவசாயிகள் நலன் கருதியும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் கொள்கைகளை எதிர்த்து நடைபெறுகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்கள்:

அகில இந்திய தொழிலாளர் காங்கிரஸ் (AITUC)

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC)

ஹிந்து மஜ்தூர் சபா (HMS)

இந்திய தொழிற்சங்க மையம் (CITU)

AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்க்க உள்ளன

பேருந்துகள் ஓடுமா:-

தமிழ்நாட்டில் நாளை அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கும். பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

இதேபோல் சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் சம்பள பிடித்தம் மற்றும் துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

ஆட்டோக்கள் ஓடுமா:-

சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர் எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. 

வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு இதுவரையில் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback