மாவட்டம் வாரியாக உங்கள் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறும் இடங்கள் விபரம் அறிய:
அட்மின் மீடியா
0
உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடைபெறும் இடங்களின் மாவட்ட வாரியான விபரம் அறிய:
பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக, நடைபெறும் வரும் இந்த முகாம் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் வழியாக 46 சேவைகளும் வழங்கப்படுகின்றனர். வார்டு, வாரியாக நடைபெறும் இந்த முகாம்கள் குறித்து அலுவலர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.
அதேபோல தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்கள் பகுதி முகாம்கள் குறித்து மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நாளை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து ஒரு நாள் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.
தற்போது அதில் வரும் நாட்களிலும் எங்கெங்கு முகாம் நடக்கிறது என்று தேதி வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இந்த இணையதளத்தின் மூலம் முகாம்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இங்கு கிளிக் செய்யவும்
https://ungaludanstalin.tn.gov.in/camp.php
Tags: முக்கிய செய்தி