எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு முழு விவரம்
எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு முழு விவரம்
மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி:-
தொழிற்பிரிவில் கார்பெண்டர், பிளம்பர், பெயிண்டர், எலெக்ட்ரிஷன், பம் ஆப்ரேட்டர், கப்ளர், டெய்லர், பார்பர், சமையல்காரர் என பல்வேறு பணி
சம்பளம்;-
மாதம் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு:-
18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் அதிகபடியாக 25 வயது வரை இருக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி:-
.சமையல் காரர், தண்ணீர் தூக்குபவர் மற்றும் வெயிட்டர் ஆகிய பதவிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி
கப்ளர், டெயிலர், துணி துவைப்பவர், பார்மர், தூய்மையாளர் மற்றும் கோஜி ஆகிய பதவிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி தொழிற்பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது 1 ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
23.08.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/08306a4a-65f0-11f0-9075-0ac9bff458eb.pdf?rel=2025072501
Tags: வேலைவாய்ப்பு