யார் துரோகி ? வைகோவுக்கு எதிராக நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டம் அறிவித்த மல்லை சத்யா
ஆகஸ்ட் 2ம் தேதி மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புமல்லை சத்யா மீது வைகோ அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ,மேலும் மல்லை சத்யாவை துரோகி எனக் கூறி கடுமையாக விமர்சித்தார்.
மேலும் மதிமுக கட்சி, கட்சி தலைவர், கட்சி கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் 32 ஆண்டுகால பொது வாழ்க்கையைகேள்வி குறியாக்கும் வகையில் `துரோகி' என சொல்லி சிறுமைப்படுத்தியதாக குற்றஞ்சாட்டி ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரத போராட்டம் இருக்கவிருப்பதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அறிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்