அன்புமணி ராமதாஸ் நடைபயணத்திற்கு தடை டிஜிபி உத்தரவு
அன்புமணி நடைபயணத்துக்கு தடைஅன்புமணி நடைபயணத்துக்கு தடை கோரிய ராமதாஸ் மனு மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு
ராமதாஸ் மனு மீது நடவடிக்கை எடுக்க அனைத்து எஸ்பிக்களுக்கும் டிஜிபி உத்தரவு
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சமூகநீதிக்கு எதிரான, மக்களை வாட்டி வதைக்கக் கூடிய, மக்களின் துயரங்களைத் துடைக்காமல் விளம்பர மோகத்தில் மகிழ்ச்சியடையும் திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும்
1. சமூக நீதிக்கான உரிமை,
2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை,
3. வேலைக்கான உரிமை,
4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை ,
5. வளர்ச்சிக்கான உரிமை
6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை,
7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,
8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை ,
9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை ,
10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை
ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடனும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் திருப்போரூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார்
திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடைய உள்ளது. 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் இன்று தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல்கிறார்.
இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், அன்புமணியின் உரிமைமீட்பு நடை பயணத்தை தடைசெய்ய, தமிழக டி.ஜி.பி.,யிடம் மனு அளித்துள்ளார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். அதன்பேரில் அன்புமணி நடைபயணத்துக்கு தடைவிதித்து டிஜிபி உத்தரவு
Tags: அரசியல் செய்திகள்