Breaking News

அரக்கோணத்தில் ஆயில் ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து

அட்மின் மீடியா
0
சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் சரக்கு ரயிலில் தீ விபத்து

திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ரயில்கள் நிறுத்தம்

சென்னை சென்ட்ரலில் இருந்து
 காலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரலிலேயே நிறுத்தம்

காலை 6 மணிக்கு புறப்பட 
வேண்டிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை அதிவிரைவு ரயில்களும் நிறுத்தம் 

அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது

மங்களூருவில் இருந்து காலை 
6:10க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரவேண்டிய சென்னை சென்ட்ரல் மெயில் திருவள்ளூரில் நிறுத்தம்.

[தீ விபத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை"

சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீ பற்றி விபத்து

சரக்கு ரயிலில் 3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்

விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் எந்த பாதிப்பும் இல்லை, இருப்பினும் பயணிகள் பாதுகாப்பிற்காக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன

தீ விபத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை - மீட்பு பணியும், விசாரணையும் ரயில்வே சார்பில் முடுக்கிவிடப்பட்டுள்ளது

Give Us Your Feedback