பஸ், ரயில் ,மெட்ரோ அனைத்து பயணத்திற்க்கும் ஒரே டிக்கெட் - அண்ணா ஆப் சிறப்பம்சங்கள் முழு விவரம்! ANNA APP
பஸ், ரயில் ,மெட்ரோ அனைத்து பயணத்திற்க்கும் ஒரே டிக்கெட் - அண்ணா ஆப் சோதனை அறிமுகம்! ANNA APP
சென்னையில் பொதுப்போக்குவரத்துக்காக மின்சார ரயில் , மெட்ரோ ரயில் பேருந்து ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஏற்கனவே மாநகரப் பேருந்தில் பயணிக்க மாநகர் போக்குவரத்து கழகத்தால் சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. அதேபோல், மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணிகளுக்கு பயண அட்டை வழங்கப்படுகிறது. மேலும் புறநகர் ரயிலில் பயணிக்க குறிப்பிட்ட இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி 3 வகையான போக்குவரத்திலும் பயணிக்க வசதியாக பிரத்யேக ஆப் ஒன்று வடிவமைக்கபப்ட்டுள்ளது
இந்த செயலியின் QR code மூலம், அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் ஆப் (Mobile apps) மூலம் நீங்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் புறப்படும் இடம் போன்ற தகவலை உள்ளிட வேண்டும். எந்த பயண முறையை தேர்வு செய்கிறீர்கள் என்று தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக நீங்கள் பயணிக்கும் வழிக்கான மொத்த கட்டணம் காண்பிக்கப்படும். யுபிஐ பேமெண்ட் (UPI Payment) முறையை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தி உங்களுக்கான கியூஆர் கோடு பொறிக்கப்பட்ட தனி பயண சீட்டை (QR code ticket) மொபைலில் பெற்று பயணிக்கலாம்.
Tags: தமிழக செய்திகள்