Breaking News

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு இன்ஸ்டா காதலனுடன் சென்ற தாய்

அட்மின் மீடியா
0



2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பருடன் பைக்கில் செல்வதற்காக குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

பின்னர், குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார் அப்பெண்ணையும், ஆண் நண்பரையும் சில மணி நேரங்களில் கண்டுபிடித்தனர்.

பின்னர், பெண்ணின் கணவரை தொடர்பு கொண்ட பொலிஸார் குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1950394790966936054?t=xKxIMI1Zoh28CH6LOuxGCQ&s=19

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback