2026 ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ஹஜ் கமிட்டி அறிவிப்பு online apply haj 2026
2026 ஹஜ் பயணத்திற்கு ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்... தமிழக அரசு அறிவிப்பு!
இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2026க்காக ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் ஜூலை 31ம் தேதி வரை இணையதளம் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2026க்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த 7ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை (இரவு 11.59 வரை) முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது https//hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு செல்போனில் HAJ SUVIDHA செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
ஹஜ் 2026-ல் விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கலாம்.
இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளைநிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஹஜ் 2026க்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி https://hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், ஹஜ் 2026ல் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் புனித பயணிகள் நபர் ஒருவருக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.1.50 லட்சத்தை செலுத்த தயார் நிலையில் இருப்பதுடன் தங்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட் உள்ளதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணம்:-
குறைந்தபட்சம் 15-1-2026 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத் தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம்,
வெள்ளைநிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
உறைத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல்
மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
The Tamil Nadu State Hajj Committee, Chennai wishes to notify that Haj Committee of India, Mumbai, has commenced receipt of Haj applications from the Muslims residing in Tamil Nadu and intending to perform Haj pilgrimage during Haj 2026. Applicants can fill online application through Haj Committee of India website i.e. https://hajcommittee.gov.in and the mobile application "HAJ SUVIDHA (available for both iphone or Android devices). The application window will be open from 07-07-2025 to 31-07-2025 (11.59 P.M.). For Haj 2026, the applicants can submit the Haj Application Form "Free of cost". Pilgrims must upload first and last page of machine readable passport, latest white background passport size photograph, copy of cancelled cheque of cover head or savings bank passbook and copy of address proof. Like previous year, this year also the selected Haj pilgrims may choose any two Embarkation Points of their choice in order of preference.
2. Haj Committee of India has been implementing the policy of "Haj once in a life time" through Haj Committee of India. The intending pilgrims should possess machine readable valid International Passport atleast valid upto 31-12-2026. The pilgrims are requested to go through the guidelines for Haj 2026 in the Haj Committee of India's website https://hajcommittee.gov.in or the mobile application "HAJ SUVIDHA (available for both iphone or Android devices). Based on initial requirement of Nusuk Masar portal for Haj 2025, applicants applying for fresh passport are advised that the Surname/last name field must not be left blank. All individuals intending to perform Haj 2026 through the Haj Committee of India are advised to keep funds ready for the 1st installment of Rs.1.5 lakh and ensure the availability of valid passports.
3. The last date for submission of filled in online application forms by the intending applicants is 31-07-2025. Cancellation on any ground except in cases of death or grave medical illness of the pilgrims will attract penalties and may result in financial loss to the applicant. Pilgrims are therefore advised to apply only after careful consideration of the preparedness and commitments to undertake the pilgrimage.
Tags: மார்க்க செய்திகள்