சென்னை மணலி தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்து காவலாளி பலி.... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
சென்னை மணலி தொழிற்சாலையில் இரும்பு கேட் விழுந்து காவலாளி பலி.... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
சென்னை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் தொழிற்சாலையில் இரும்புகேட் விழுந்ததில் காவலாளி உயிரிழந்தார். இரும்பு கேட்டை மூடியபோது எதிர்பாராதவிதமாக சரிந்ததில் காவலாளி குமாரசாமி உயிரிழந்தார்.
சென்னை மணலி பகுதியில் ஹரிகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் குமாரசாமி என்ற 68 வயது முதியவர் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி பணியில் இருந்த பொழுது குமாரசாமி நிறுவனத்தின் பெரிய இரும்பு கேட்டை திறந்து இருக்கிறார். அப்பொழுது திடீரென இரும்பு கேட் அவர் மேலே விழுந்தது.சத்தம்கேட்டு அங்கிருந்த ஊழியர்கள் ஓடிவந்து இரும்பு கேட்டை தூக்கி குமாரசாமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் போலீசார் கொலை நோக்கம் இல்லாத மரணம் என அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/Dinakuzhal/status/1937498684406862034
Tags: தமிழக செய்திகள்