மீண்டும் எல்லை பகுதியில் தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் முடிவுகு வந்ததாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றுவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருவதால் பரபரப்பு.

பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று மாலை 5 மணி முதல் தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், காஷ்மீரின் கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்ஷேராவில் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. 

தாக்குதல் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புரிந்துணர்வு முடிவை மீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்துவதால் எல்லைப் பகுதிகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஸ்ரீநகர் பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “போர் நிறுத்தம் இப்போது என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுக்க வெடிச் சத்தம் கேட்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக போர் நிறுத்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, இந்த முடிவு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு வந்திருந்தால், உயிரிழப்புகள், பொருட் சேதங்கள் ஏற்பட்டிருக்காது எனக் கூறியிருந்தார்.

  • Udhampur
  • Akhnoor
  • Nowshera
  • Poonch
  • Rajouri
  • Mendhar
  • Jammu
  • Sunderbani
  • RS Pura
  • Arnia
  • Kathua 
ஆகிய 11 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகின்றது,

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-

https://x.com/adminmedia1/status/1921243519345189253

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback