9 ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த 6 ம் வகுப்பு மாணவன் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த, 15 வயது மாணவரும், இவரது எதிர்வீட்டில் வசிக்கும், ஆறாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் வேறு சில நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர், அப்போது ஏதோ காரணத்தால், ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கும், எதிர் வீட்டு சிறுவனுக்கும் சண்டை வந்து, வாக்குவாதம் நடந்தது.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டதாக சொல்லப்படுகின்றது. கோபமடைந்த சிறுவன், தன் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவரின் வயிற்றில் குத்திவிட்டு வீட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
வயிறு கிழிந்து ரத்தம் சொட்ட உயிறருக்கு போராடிய சிறுவனை அவனது பெற்றோர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி ஹப்பள்ளியின் காவல் ஆணையாளர் சசி குமார் குறிப்பிடும்போது, 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு கத்தியால் குத்த வேண்டும் என்ற மனநிலை வளர்ந்துள்ளது துரதிர்ஷ்டம் வாய்ந்தது.
தொலைக்காட்சி அல்லது மொபைல் போன்களில் அவர்கள் பார்க்கும் வன்முறை காட்சியின் விளைவாக மற்றும் குடும்பம், சமூகம் ஆகியவற்றின் விளைவாக இது ஏற்பட்டிருக்க கூடும். அதனால் ஒவ்வொருவரும் விழிப்புணர்வை பெற வேண்டும். இளம் குழந்தை, குற்றவாளியாக குறிப்பிடப்படுகிறான் என அவர் வருத்தத்துடன் கூறினார்.
Tags: இந்திய செய்திகள்