12 ம் வகுப்பு படித்தவர்கள் கல்லூரி படிக்க நவாஸ்கனி சொந்த செலவில் வழங்கும் உயர் கல்வி உதவித் திட்டம் - உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம் இதோ k.navaskani scholar scholarship scheme
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்
விண்ணப்பங்கள் 30, மே 2025 (30-05-2025) க்குள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:- https://forms.gle/pmX7Bj53XqwRuAz96
திறமை இருந்தும் பொருளாதாரத் தடையினால் உயர்கல்வியை தொடர முடியாத இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தன் சொந்த நிதியிலிருந்து கடந்த 6 ஆண்டுகளாக உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூபாய் 1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஆறு ஆண்டுகளில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த சுமார் 4200 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாகிய திட்டம். தற்போது ஏழாவது ஆண்டாக
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் உயர் கல்வி உதவித் திட்டம் - 2025
Tags: மார்க்க செய்தி