உலகின் முதல் ஏஐ தமிழ் குர்ஆன் ஆண்ட்ராய்டு ஆப் டவுன்லோடு செய்ய AI Tamil Quran
அட்மின் மீடியா
0
AI தமிழ் குர்ஆன் ஆண்ட்ராய்டு App வெளியிடப்பட்டுள்ளது world's first AI-powered Tamil Quran
ai என்றால் என்ன
வளர்ந்து வரும் இளைய தலைமுறையின் அறிவாற்றலும் செயல் திறனும் அதிகரித்து வருவது போலவே தற்போதைய ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், கணினி, அதனால் இயக்கப்படும் இயந்திர மனிதன், மேலாதிக்கம் பெற்று வருகின்றன.
நாம் பேசும் மொழியைப் புரிந்து கொண்டு அக்கட்டளையைச் செயல்படுத்தக்கூடிய கைபேசி வசதிகள் வழிகாட்டும் வரைபடங்கள், கணினிக் கட்டுப்பாட்டால் இயக்கக்கூடிய ஓட்டுநரில்லா வாகனங்கள், மற்றும் பல தானியங்கி கருவிகள் போன்றவைகள் எல்லாம் கணினி மென்பொருள் செயல்பாடுகளினால் கிடைக்கப் பெற்றவை.
எதிர்காலத்தில் மனிதனின் பணிகளை எளிமைப்படுத்தி சிறப்பாகச் செய்யக்கூடிய மாதிரி இயந்திர வடிவங்களின் ஆட்சியில் உலகம் சுழலும் என்றால் அது மிகையாகாது
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யக்கூடிய கணினி அமைப்புகளைக் குறிக்கிறது. இந்த பணிகளில் கற்றல், பகுத்தறிதல், சிக்கலைத் தீர்ப்பது, இயற்கை மொழியைப் புரிந்துகொள்வது மற்றும் புதிய தகவலை மாற்றியமைத்தல் ஆகியவை அடங்கும்.
ஏஐ தமிழ் குர்ஆன்
AI தொழில் நுட்ப வல்லுனர் S.M. அப்பாஸ் அவர்கள் AI தமிழ் குர்ஆன் ஆண்ட்ராய்டு App-ஆக வெளியிட்டுள்ளார்
tamilquran.ai உருவாக்கிய AI தொழில் நுட்ப வல்லுனர் S.M. அப்பாஸ் அவர்கள் Android Play Store மூலம் அனைவரும் இதை இலவசமாக install செய்து எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளார்
ஆப்பில் உள்ள ஹெட்போன் ஐகானை அழுத்தி Tamil Quran Audio ஆப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆப்பும் இதுவே முதல் முறை.
குர்ஆனில் உள்ள 6236 வசனங்களில் நீங்கள் விரும்பும் (வார்த்தை , வசன எண், அத்தியாயம் search மூலம்) வசனத்தின் தமிழாக்கத்தை நொடிப்பொழுதில் கேட்கலாம்
AI Tamil Quran சிறப்பம்சங்கள்:-
- தமிழ் குர்ஆன் AI என்பது குர்ஆன் ஐ தமிழில் எளிதில் கற்றறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட முதல் AI (செயற்கை நுண்ணறிவு) இணையதளமாகும்.
- குர்ஆனில் இறைவன் கூறியுள்ள சட்டதிட்டங்கள், வழிமுறைகள், அறிவுரைகள், வரலாறுகள், சம்பவங்கள், போதனைகள் போன்றவற்றை நன்கு கற்றறிந்து ஒரு மார்க்க அறிஞரிடம் கேட்பது போன்றே தமிழில் நீங்கள் கேட்டு நொடிப்பொழுதில் பதிலை இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
- நீங்கள் விரும்பும் குர்ஆன் வசனத்தின் தமிழாக்கத்தை எளிதில் படித்துக் கொள்ளலாம். படித்துக் கொள்வதோடு, நீங்கள் விரும்பும் குர்ஆன் வசனங்களை தமிழில் வாசிக்க சொல்லி கேட்கலாம்.இதோடு, ஒரு குர்ஆன் வசனத்தின் அரபி மூலத்தில் உள்ள வார்த்தைகளுக்கு அதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதையும் வார்த்தைக்கு வார்த்தை தெரிந்து கொள்ளலாம்.
- உங்களுக்கு நினைவில் உள்ள குர்ஆன் வசனம் எந்த அத்தியாயம் மற்றும் வசன எண்ணில் உள்ளது என்பதையும் நொடிப்பொழுதில் தேடி எடுத்துக் கொள்ளலாம்.
- தலைப்பு வாரியாக குர்ஆன் அத்தியாயம் வாரியாக வசனங்களை நீங்கள் படித்துக் கொள்ளலாம்.
- நீங்கள் விரும்பும் தலைப்பில் குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் மார்க்க உரையை (பயான்) இதில் நீங்கள் கேட்கலாம்,
- தமிழ் குர்ஆன் AI உங்களுக்கு உரை நிகழ்த்தும்.மேலும், நீங்கள் சொற்பொழிவாற்ற விரும்பும் தலைப்பை குறிப்பிட்டால், அந்த தலைப்பில் குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் உரையை தமிழில் எழுதி கொடுக்கும்.
- ஒரு குறிப்பிட்ட வசனத்தை அரபியில் எப்படி உச்சரிக்க வேண்டும் எனக் கேட்டு, அரபி உச்சரிப்பை தமிழில் எழுதி பெற்றுக் கொள்ளலாம்.
- மேலும், குர்ஆன் அரபி வசனத்தை வாசிக்க சொல்லி கேட்கலாம்.குறிப்பிட்ட தலைப்பில் குர்ஆன் வசனங்களை ஆய்வு செய்ய நீங்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- குர்ஆன் தமிழாக்கம் தொடர்பான உங்களின் அனைத்து தேவைகளையும், (குர்ஆன் தமிழாக்கத்தை படிப்பது கேட்பது கற்றுக் கொள்வது ஆய்வு செய்வது புரிந்து கொள்வது) ஒரே இடத்தில் இந்த AI தமிழ் குர்ஆன் இணையதளம் மூலம் தமிழில் நீங்கள் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
- இதுவே முதல் AI-இயக்கப்படும் தமிழ் குர்ஆன் ஆகும், இது தமிழ் பயனர்கள் கேள்விகளைக் கேட்கவும், சூழல்-விழிப்புணர்வு பதில்களைப் பெறவும், குர்ஆனிய அறிவை உள்ளுணர்வு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட முறையில் ஆராயவும் உதவுகிறது.
ஆப் டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்-
https://play.google.com/store/apps/details?id=com.quran.aitamilquran&pcampaignid=web_share
Tags: மார்க்க செய்தி