அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச 2 ஆண்டு செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
இடைநிலை கண்ணியல் பணியாளர் பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம் aravind eye hospital 2 year diploma course
அரவிந்த் கண் மருத்துவமனையில், பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட செவிலியர் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி இலவசம், மற்றும் பாதுகாப்பு மற்றும் நல்ல தங்குமிடம் உட்பட பல வசதிகளுடன் வழங்கப்படுகிறது.
+2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது. உச்ச வயது வரம்பு 19. +2 முடித்த மாணவிகளுக்கு பாதுகாப்பான விடுதி, ஆரோக்கியமான உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் கூடிய வேலை, தனித் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஆகிய வசதிகளுடன் கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் துணை நிற்கும் மாபெரும் வாய்ப்பு.
அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே...
பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம்.
அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில், கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் துணை நிற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பயிற்சியின் விவரங்கள்:-
பயிற்சி காலம்: 2 வருடங்கள்
பயிற்சி கட்டணம்:- இலவசம்
பயிற்சி பெறும் இடம்: அரவிந்த் கண் மருத்துவமனை
பயிற்சி பெறும் மாணவிகள்: பிளஸ் 2 முடித்த மாணவிகள்
பயிற்சிக்கு பிறகு: ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு
வசதிகள்:பாதுகாப்பான விடுதிஆரோக்கியமான உணவுதனித் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு
தமிழகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனையின் பெயரும் மருத்துவ சேவைகளும் மிகவும் பிரபலம். உயர்தரமான கண் சிகிச்சைகளை ஏழை-பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்கும் அளித்து வரும் அரவிந்த் கண் மருத்துவமனையில்
கண் மருத்துவ உதவியாளர், விழி ஒளி ஆய்வு உதவியாளர், மருத்துவப் பதிவேட்டுத்துறை உதவியாளர், நோயாளிகளின் மருத்துவ ஆலோசனை உதவியாளர், கண் கண்ணாடி தயாரிப்பு மற்றும் விநியோக உதவியாளர், வசதி ஒருங்கிணைப்பு உதவியாளர், ஆய்வக உதவியாளர், மருந்துக்கடை உதவியாளர், உபகரணங்கள் பராமரிப்புதுறை உதவியாளர், பண்டகசாலை துறை உதவியாளர் ஆகியவை பயிற்சி அளிக்கப்படும்
இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்
https://aravind.org/mlop-recruitment/
https://aravind.org/wp-content/uploads/2024/06/HR_17x8.75_Bro_MLOP_recruit_T_2024_Edited.pdf
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு