ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் மத்திய அரசுக்கு - சந்திரபாபு நாயுடு கோரிக்கை
மத்திய அரசு 500 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் 2016ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தன. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாத என பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்தன.
இதனிடையே கடந்த 2023ஆம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில் மத்திய அரசு 500 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் மூன்று நாள் மாநாடு ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது.
அதில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ரூ.500 மற்றும் ரூ.1,000 என உயர் மதிப்புள்ள நோட்டுகளை ரத்து செய்யுமாறு பிரதமர் மோடிக்கு பரிந்துரைத்தேன். ரூ.1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டாலும் ரூ.500 நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட்டன. ரூ.2000 நோட்டுகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன.தேவைப்பட்டால் அதிக மதிப்புள்ள அனைத்து ரூபாய்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதற்கு பதிலாக டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும். இந்த தெலுங்கு தேசம் மாநாட்டிலும், ரூ.500 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார்.
Tags: இந்திய செய்திகள்